உலக வங்கி உதவியுடன் வேளாண் உற்பத்தி-KERA அழைப்பு!

விவசாயிகளுடன் பயனுள்ள வேளாண் உற்பத்தி கூட்டணிகளை உருவாக்க, நிறுவனங்களுக்கு KERA
அழைப்பு விடுக்கின்றது.

உலக வங்கி உதவியுடன் கேரளா அரசு செயல்படுத்தி வரும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற  வேளாண்மை மதிப்புச் சங்கிலி நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் , (KERA)உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும்(FPC/FPO) முன்னணி வேளாண்மை வணிக நிறுவனங்களுக்கும்(ABP), இடையே சக்தி வாய்ந்த வேளாண்மை உற்பத்தி கூட்டணிகளை உருவாக்குவதற்கான ஒரு வரலாற்று சிறப்புமிக்க முயற்சி தொடங்குகின்றது. வேளாண் தொடர்புடைய பண்ணை மற்றும் பண்ணை அல்லாத நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட் சங்கிலிகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இணைய வழி வணிக தளங்கள் போன்ற நிறுவனங்கள், இந்த வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகின்றன.

இந்த முயற்சியானது கேரளாவின் உயர்தர வேளாண் விளைப் பொருட்களை உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுடன் இணைக்கும் நிலையான தொடர்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் சிறந்த விலையும், பாதுகாப்பான சந்தை இணைப்பையும் பெறுவது பூர்த்தி செய்யப்படுகிறது.

KERA திட்டத்தின் கீழ். தகுதி உள்ள நிறுவனங்களுக்கு வேளாண் பொருள் உற்பத்தி முதலீடு மற்றும் வணிக மேம்பாட்டுக்கான முதலீடு என மொத்த கூட்டணி செலவில் 60% வரை அதிகபட்சமாக ரூ. இரண்டு கோடி மானியமாக வழங்கப்படும்.மேலும் மூன்று ஆண்டுகளுக்கு தொழில்நுட்ப வல்லுநர் உதவியும் வழங்கப்படும். இத்திட்டத்தில் ரூபாய் 10 கோடி வருமானம் கொண்ட மற்றும் கேரள விவசாய சமூகங்களுடன் பணியாற்றுவதில் நிரூபிக்கப்பட்ட அர்ப்பணிப்பு கொண்ட நிறுவனங்கள் ஒத்துழைக்க அழைக்கப்படுகின்றன. மேலும் திட்டத்தில் குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவம், 200 உழவர் உறுப்பினர்கள் மற்றும் ரூபாய் பத்து லட்சம் வருமானம் கொண்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அழைக்கப்படுகின்றன.

விருப்பமுள்ள நிறுவனங்கள் https://pa.kera.kerala.gov.in/auth/login என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு KERA திட்ட இயக்குனர் அலுவலக தொலைபேசி  +91 9037824060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Coimbatore
PIC Contact Number: 9037076600