வாலிபருக்கு கத்திக்குத்து – தொழிலாளி கைது..!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பக்கம் உள்ள சிங்கம்புணரி, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அன்பு. அவரது மகன் சூர்யா ( வயது 22 ) இவர் சூலூர் அருகே உள்ள இடையர்பாளையத்தில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள தொழிலாளர் குடியிருப்பு தங்கியுள்ளார். இவருக்கும் அதே தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் திருவாரூரைச் சேர்ந்த குகன்ராஜ் ( வயது 36) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது .இந்த நிலையில் நேற்று சூர்யா குடியிருப்பு பகுதியில் இருந்த போது குகன்ராஜ் அங்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குகன்ராஜ் ,சூர்யாவை கத்தியால் குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் மாதவன வழக்கு பதிவு செய்து குகன்ராஜை கைது செய்தார்..