கடையில் இருந்த பெண்ணின் தலையில் சுத்தியலால் தாக்கி 4 பவுன் செயின் பறிப்பு.!!

கோவை அருகே உள்ள சூலூர், சுகந்தி நகரில் வசிப்பவர் மேரி ஜூலியா ( வயது 57) மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று கடையில் இருந்த போது 2 வாலிபர்கள் சிகரெட் வாங்குவது போல கடைக்கு வந்தனர் .திடீரென அவர்கள் மேரி ஜூலியாவின் தலையில் சுத்தியலால் அடித்து தாக்கிவிட்டு அவர் கழுத்தில் அடைந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர் . இதில் காயம் அடைந்த மேரிஜூலியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். கேமராவில் பதிவான உருவத்தை வைத்து சந்தேகத்திற்கு இடமான 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள் .இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.