கோவை மே 24 கோவை துடியலூர்பக்கம் உள்ள,கே என் ஜி புதூர்பகுதியில் தனியார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் வெங்கட ராமகிருஷ்ணா. இவரது மனைவி சகுந்தலா (வயது 66) இவர் கடந்த 8 மாதங்களாக அங்குகணவருடன் வசித்து வருகிறார். இவர் மன அழுத்தம் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் வீட்டின் திறந்த மாடியில் இருந்து தவறி கிழே விழுந்தார்.இதில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர் வழியில் அவர் இறந்து விட்டார் இது குறித்து அவரது கணவர் வெங்கட ராமகிருஷ்ணா துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அப்பார்ட்மெண்ட் மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு.
