செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்பியதை தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல் – தங்கையின் கணவருக்கு போலீசார் வலைவீச்சு..!

கோவை துடியலூர் பக்கம் உள்ள சுப்பிரமணியம் பாளையம், ஜல்லி கோரையை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சித்ரா (வயது 32) இவர் அங்குள்ள பாலாஜி கார்டனில் டீ வியாபாரம் செய்து வருகிறார் .இவருக்கு அவருடைய தங்கையின் கணவர் கார்த்திக் செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்பினாராம். இதை சித்ரா கண்டித்தார் .இந்த நிலையில் நேற்று அங்குள்ள ரோட்டில் சித்ரா நடந்து சென்றார் .அப்போது அவரை தங்கையின் கணவர் கார்த்திக் வழிமறித்து தகாத வார்த்தைகளால் ,பேசி இரும்பு தடியால் தாக்கினாராம் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது . இது குறித்து சித்ரா துடியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .போலீசார் கார்த்திக் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தாக்குதல், கொலை மிரட்டல், உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.