கோவை சிங்காநல்லூர் ,நீலி கோணாம்பாளையம், சக்தி நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 73 ) சம்பவத்தன்று இவர் சூலூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டு டவுன்பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண் இவரது செயின் கொக்கி கழண்டு இருப்பதாக கூறி செயினை கழட்டி பர்சுக்குள் பத்திரமாக போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார். லட்சுமியும் செயினை கழட்டி கையில் வைத்திருந்த பர்சுக்குள் போட்டார்.பஸ்சை விட்டு இறங்கி பர்சை பார்த்த போது அதில் இருந்த செயினை காணவில்லை. இது குறித்து ராமநாதபுரம் போலீசில் லட்சுமி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பஸ்சில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் அந்தப் பணத்தை திருடியது யார்? என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக நீலி கோணாம்பாளையத்தைச் சேர்ந்த நதியா ( வயது 38 ) என்ற பெண்ணை கைது செய்தனர்.இவர் தான் இந்த நகையை திருடியிருப்பது தெரிய வந்தது. நகை பறிமுதல் செய்யப்பட்டது .இவர் மீது உக்கடம் காவல் நிலையத்தில் ஏற்கனவே திருட்டு வழக்கு பதிவாகியுள்ளது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு – பெண் கைது..!





