தமிழகத்தில் மீண்டும் பால் விலை உயர்வா..? அமைச்சர் அதிர்ச்சி தகவல் !!

திருவள்ளூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், ‘பால் விலை உயர்த்துவதற்கான வாய்ப்பே இல்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் தூங்கிக் கொண்டே இருப்பதாகவும், அவர்கள் ஆட்சி காலத்தில் லிட்டர் 6ரூபாய் பால் விலை  இருந்ததாக தெரிவித்தார்.

தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்றவுடன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிப்படி பால் விலையை 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்டார். இதனால் அரசுக்கு மாதம் 220 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்காக பால் விலை உயர்த்துவதற்கான வாய்ப்பு இல்லை என திட்டவட்டமாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியில் மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் பங்கேற்று வாசிப்புத் திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.