கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூர், பண்ணாரி அம்மன் கோவில் பகுதியில் குட்டிகளுடன் பத்துக்கு மேற்பட்ட யானை கூட்டம் உலா வருகிறது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக யானைகள் விவசாய விளைநிலங்கள் மற்றும் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை அடுத்து அதனை தடுக்கும் விதமாக வனத்துறையினரும் வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட பல்வேறு குழுக்களை அமைத்து வனப்பகுதிக்குள் விரட்டியும் வருகின்றனர்.
இந்நிலையில் நரசிம்மநாயக்கன்பாளையம் பூச்சியூர் பண்ணாரி அம்மன் கோவில் பகுதியில், குட்டிகளுடன் பத்துக்கு மேற்பட்ட காட்டு யானைகள்,அங்கு நின்று கொண்டு இருந்தது.அதனை அப்பகுதியில் இருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். அப்பகுதிக்கு வரும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன், கவனமாக செல்ல வேண்டும் என்று பதிவு செய்து உள்ளார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அதனை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.








