வீடுகளை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை – பொதுமக்கள் அச்சம்..!

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் பல்வேறு பகுதிகளில் புகுந்து உயிர்சேதத்தையும் பொருட்டே தங்களையும் ஏற்படுத்திவருகிறது இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை இடதுகறை பகுதியில் அதிகாலை மூன்று முப்பது மணியளவில் புகுந்த ஐந்து காட்டுயானைகள் கொண்ட கூட்டம் அங்குள்ள செல்வி என்பவரின் வீட்டின் கதவு ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளது யானைகள் அப்பகுதிக்கு வருவதாக முன்கூட்டியே தகவல் கிடைத்ததால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பாஜக நிர்வாகி மணிவண்ணன் என்பவர் வீட்டிலிருந்து வெளியே சென்று பாதுகாப்பாக இருந்ததால் உயிர் தப்பித்ததாக தெரிவித்துள்ளார் மேலும் அருகே உள்ள மேரி என்பவர் வீட்டின் கதவு ஜன்னல்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது இச்சம்பவம் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிகாலை ஐந்து மணிக்கு மேல் காட்டு யானைகளை அப்பகுதியிலிருந்து விரட்டியுள்ளனர் மேலும் அப்பகுதியில் சுமார் மூன்று வருடங்களாக தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் எனவே ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்