கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் நுழைந்து உணவு தேடி நியாய விலை கடை மளிகை கடை வீடுகள் சத்துணவு மையங்கள் போன்றவற்றை உடைத்து உள்ளிருக்கும் உணவு பொருள்களை சாப்பிட்டு சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் வால்பாறை அருகே சோலையார் எஸ்டேட் பகுதியில் இரண்டாவது டிவிஷனில் முல்லை மலர் சுய உதவி குழு நியாய விலை கடை உள்ளது.
இந்த கடையில் இரண்டு தினங்களுக்கு முன்பாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக ரேஷன் பொருள்களை வைத்துள்ளனர். நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் ஒற்றைக் காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து நியாய விலை கடையை உடைத்து சேதப்படுத்தி ஜன்னல் கதவு போன்றவற்றை உடைத்து உள்ளிருந்து அரிசி பருப்பு, சர்க்கரை போன்றவற்றை சாப்பிட்டு நின்றது தகவல் அறிந்து வந்த மானாம்பள்ளி வனத்துறையினர் யானையை அப்பகுதி என்று வன பகுதிக்குள் விரட்டினர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.