யாருக்கு மாம்பழம் சின்னம்..?

கட்சிக்குள் பிரச்சனை ஏற்பட்டால் சின்னத்தை முடக்கி வைப்பது தான் நடைமுறையாக இருந்து வருகிறது.குலுக்கல் முறையில் கொடுக்கும் முறையும் பின்பற்றவில்லை.

பாமகவின் பெயர், சின்னம் பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக்கோரியும், தேர்தல் ஆணையம் அனுப்பி கடிதத்தை ரத்து செய்யக்கேரியும் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள வழக்கை சுட்​டிக்​காட்​டியதுடன், உள்​கட்சி பிரச்​சினை தீரும் வரை தேர்​தலை தள்ளிவைக்க முடி​யாது என்​றும், உரிமை​யியல் நீதி​மன்ற தீர்ப்​புக்கு பிறகே உயர் நீதி​மன்​றத்தை நாட முடி​யும் என்று தெரிவித்து வழக்கை மே மாதத்துக்கு ஒத்திவைத்தது.

இந்​நிலை​யில், சின்னத்தை முடக்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், ஜோய்​மால்ய பக்​சி, வி.எம்​.பஞ்​சோலி அடங்​கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்: கட்சிக்குள் பிரச்சனை ஏற்பட்டால் சின்னத்தை முடக்கி வைப்பது தான் நடைமுறையாக இருந்து வருகிறது. குலுக்கல் முறையில் கொடுக்கும் முறையும் பின்பற்றவில்லை. இதனால் கட்சி யாருக்கு சொந்தம் என்பது தீர்மானிக்கும் வரை மாம்பழ சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்கியது யார்? இரு தரப்பும் மாம்பழத்தை பிழிந்து ஜூஸ் எடுத்து விடாதீர்கள். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிரெண்ட்லி மேட்ச் ஆடுகிறது. இந்த விவ​காரத்​தில் உரிய மனுவை உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் ராமதாஸ் தாக்​கல் செய்​ய​லாம் என அறிவுறுத்தினார். புதிய மனுவை அவர் தாக்​கல் செய்​யும்​போது, அந்த மனு மீது 3 நாட்​களுக்​குள் விசா​ரணை நடத்தி தீர்ப்பு அளிக்க வேண்​டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.