விடுமுறை தினத்தை முன்னிட்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் நீண்ட நாட்களுக்கு பின்னர், தண்ணீர் தற்போது சீராக கொட்டி வருகிறது. இந்நிலையில் விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
காலை முதலே குற்றாலம் மெயின் அருவிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் என்பது அலைமோதி வரும் நிலையில், நீண்ட நேரம் காத்திருந்து அருவிகளில் ஆனந்த குளியல் இட்டு வருகின்றனர்.
விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வரும் நிலையில், பழைய குற்றால அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Leave a Reply