எஸ்.ஐ.ஆர் படிவங்களை முறையாக சமர்ப்பிக்காதவர்களுக்கு, வாக்காளர் பதிவு அலுவலர் மூலம் அறிவிப்பு வழங்கப்படும். 13 ஆவணங்களில் ஒன்றை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட நாயகி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், எஸ். ஐ.ஆர் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. வாக்காளர்களின் முகவரிகள் சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். பல ஆயிரம் பேர் முகவரி மாறி சென்றனர். பல ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இவர்களையெல்லாம் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பித்த வாக்காளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த 19ஆம் தேதி வெளியானது. இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயத்துள்ள 13 ஆவணங்களில், தங்களுக்கு பொருந்தக்கூடிய ஆவணத்தை, வாக்காளர்கள் விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்ட பின், தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள், இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவர். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.








