5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்.!

மிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் இன்று முதல் பிப்ரவரி 28 வரை நடைபெறுகிறது.அங்கன்வாடி மற்றும் சுகாதார நிலையங்களில் 6 மாதம் முதல் 60 மாத வரையிலான குழந்தைகளுக்கு இந்த நுண்சத்து வழங்கப்படுகிறது. சுமார் 1.07 லட்சம் குழந்தைகளுக்கு இந்த திரவத்தை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கண் பார்வை குறைபாடு மற்றும் மாலைக்கண் நோயைத் தடுக்க இந்த முகாம் மிக முக்கியமானது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத இந்த திரவத்தை குழந்தைகளுக்கு வழங்கி, ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத மாவட்டமாக மாற்ற பெற்றோர்கள் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.