வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்..!

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டு தோறும் இந்து முன்னணி சார்பாக நடைபெற்றுவரும் விநாயகர் சதுர்த்தி விழா இந்தாண்டு வரும் 27 ஆம் தேதியன்று வெகுசிறப்பாக நடைபெற உள்ளது அன்றைய தினம் அனைத்து பகுதிகளிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதனைத்தொடர்ந்து வரும் 31 ஆம் தேதியன்று அனைத்து சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் சென்று நடுமலை ஆற்றில் கரைக்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணியினர் துரிதப்படுத்தி வருகின்றனர் இவ்விழாவை முன்னிட்டு அதற்க்கான ஆலோசனைக் கூட்டம் வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலையில் காவல் நிலையத்தில் நேற்று நடைபெற்றது இக்கூட்டத்தில் வழக்கமாக பிரதிஷ்டை செய்யும் இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யவேண்டும், பிளாஸ்ட் ஆஃப் பாரீஸ் ஆல் தயாரிக்கப்பட்ட சிலைகளை ஆறுகளில் கரைக்ககூடாது, அதிக பட்சமாக சுமார் 10 அடி உயரம் வரை மட்டுமே சிலைகள் இருக்க வேண்டும், சிலைகளை கரைக்க செல்லும் போது வழக்கமான விதிமுறைகளை கடைபிடித்து விழா நிறைவு பெரும் வரை காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து முன்னணியின் கோவை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஏ.எஸ்.டி.சேகர், நகரத்தலைவர் சதீஷ், நகர பொதுச்செயலாளர் லோகநாதன்,ஒன்றிய தலைவர் சி.வி.ரவீந்திரகுமார், ஒன்றிய பொதுச்செயலாளர் ரமேஷ், முடீஸ் ஒன்றிய தலைவர் செல்வராஜ், ஒன்றிய பொதுச்செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் அனைவரும் கலந்து கொண்டனர்