திமுக மகளிரணி தலைவியாக விஜயா தாயன்பன் நியமனம்..!!

திமுக மகளிரணி தலைவியாக விஜயா தாயன்பன், செயலாளராக ஹெல்ன் டேவிட்சன், இணைச் செயலாளராக குமரி விஜயகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக பொதுதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தி.மு.க. சட்ட திட்டம் விதி-18, 19 பிரிவுகளின்படி மாநில மகளிர் அணி – மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள் – பிரச்சாரக்குழு செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள் -ஆலோசனைக்குழு நியமனம் தலைமைக் கழகத்தால் பின்வருமாறு நியமிக்கப்படுகிறார்கள்.

 

நிர்வாகிகள் நியமனம் விவரம்;-

மகளிர் அணித் தலைவர் – விஜயா தாயன்பன்

மகளிர் அணிச் செயலாளர் – ஹெலன் டேவிட்சன்

மகளிர் அணி இணைச் செயலாளர் – குமரி விஜயகுமார்

மகளிர் அணி துணைச் செயலாளர்கள் – பவானி ராஜேந்திரன், கயல்விழி செல்வராஜ்

மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர்கள் – நாமக்கல் ப. ராணி

மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளர்கள்- தமிழரசி ரவிக்குமார்

மகளிர் தொண்டர் அணி துணைச்செயலாளர்கள்- சத்யா பழனிகுமார், ரேகா பிரியதர்ஷினி, விஜிலா சத்யானந்த், மாலதி நாகராஜ்

மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளர்கள் – சேலம் சுஜாதா, அமலு, எம்.எல்.ஏ., ராணி ரவிச்சந்திரன்