திமுகவை கிழித்து தொங்க விட்ட விஜய்.!!

தவெக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா இன்று (பிப்.2) பனையூரில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், “தமிழ்நாட்டில மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருக்கோம்.இன்னைக்கு நாம அரசியலுக்கு வந்ததும் நம்மள விமர்சிக்கிறாங்க. `அன்னைக்கு எம்.ஜி.ஆர் வந்தார் என்று சொன்னால் அவர் பல வருடங்கள் ஒரு கட்சியில் இணைந்து செயல்பட்டார்.

விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கு’ என இன்னைக்கு நம்மை விமர்சிக்கிறவங்க தான் அன்னைக்கு அதே எம்.ஜி.ஆரையும் கவர்ச்சி தவிர வேற ஒன்னும் இல்லனு விமர்சிச்சாங்க.

எம்.ஜி.ஆர் மட்டுமல்ல, அவர் தொண்டர்களையும் விட்டுவைக்கல. ஆன மக்கள் எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்காங்க….இப்பவும் அதே தேஞ்சுபோன விஷயத்தை தூக்கிட்டு வருவாங்க… டெக்னாலஜி எல்லாம் வளர்ந்துட்டு வருது… கொஞ்சம் அப்டேட் ஆகுங்க பாஸ்.

இன்னைக்கு இருக்கிற டிஜிட்டல் உலகத்துல திருவள்ளுவர் இருந்திருந்தா

“‘அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம்

திமுக முதற்றே உலகு’ என்று எழுதியிருப்பாரு”

திமுக ஆட்சியை மக்கள் வெறுத்துவிட்டாங்க. 2026 தேர்தலில் தவெக தான் ஒரே ஆப்ஷன். நோ டைவர்ஷன். அவங்கள எதிர்த்தா மோசமா விமர்சிப்பாங்க…

நாம அவங்க செய்யுற ஊழலை பேசினா அவங்க அதே பழைய டப்பாவா உடனே எடுத்து உருட்டுவாங்க. பவள விழா பாப்பாவுக்கு வேற என்ன தெரியும். பழைய டப்பாவை உருட்ட தான் தெரியும்.

அதுக்காக நாம சொல்லாம இருக்க முடியுமா? சொல்லிதான் தான் ஆகணும்” என திமுகவை விமர்சித்திருக்கிறார். நம்ம மக்கள் இந்த விசிலை ஊதுறதுல தீய சக்தியும் ஊழல் சத்தியும் தெறிச்சு ஓடும்.

தேர்தல்ல மூன்று முனை போட்டி, நான்கு முனை போட்டி என்கிறார்கள்… சொல்றவங்க சொல்லிட்டு இருக்கட்டும். ஒரு பக்கம் மக்கள் சக்தியுடன் தவெக, இன்னொரு பக்கம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அப்புறமா, பாஜக தலைமையில் ஒரு கூட்டணி” என அதிமுகவையும் விமர்சித்திருக்கிறார். விசில் சின்னம் இல்லாத ஊரே இல்ல. என்னோட அம்மா, அக்கா, தங்கைகள், அண்ணன், தம்பி என எல்லாரும் தவெகவுக்கு ஓட்டுப்போடுறதை யாராலையும் தடுக்க முடியாது.

தீயசக்தியை வீழ்த்த இந்த தூய சக்தியால மட்டும் தான் முடியும். டப்பா எஞ்ஜின், ஓட்ட எஞ்சின் என எவ்வளவு எஞ்சின் வந்தாலும், டாப் எஞ்சின் நம்ம தவெகதான், இதை மக்களே முடிவு பண்ணீட்டாங்க. மாபெரும் மக்கள் சக்தி நமக்கு இருக்கு” என்று பேசியிருக்கிறார்.