தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (செப்.27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் தமது மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
இதற்காக விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இன்று காலை 8 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு புறப்பட்டார். அங்கு, தனி விமான மூலம் காலை 9:30 மணியளவில் திருச்சி சென்றடைந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் சென்றடைகிறார்.
திருச்சி விமான நிலையத்திற்கு காலை 9.30 மணிக்கு வந்துவிட்டார். திருச்சி மரக்கடை அருகே அவர் பேசுவதற்கு 10.30 மணி முதல் 11 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் மரக்கடைக்கு அவர் வருவதற்கே மதியம் 2.30 மணி ஆகிவிட்டது. சுமார் 20 நிமிட தூரத்தை அவர் கடக்க 6 மணி நேரம் ஆகும் அளவுக்கு வழிநெடுகிலும் கூட்ட நெரிசலால் அவரது பிரச்சார வாகனம் இன்ச் இன்ச்சாக நகர்ந்தது.
சற்று முன் தனது பிரச்சாரத்தை பேச ஆரம்பித்தார் விஜய்… 6 மணி நேரம் தாமதத்திற்குப் பின் நாமக்கல்லில் பரப்புரையை தொடங்கினார் தவெக தலைவர் விஜய்.
டிரான்ஸ்போர்ட் ஹப் ஆப் சவுத் இந்தியா நம்ம நாமக்கல் மாவட்டம்.. இங்க பார்த்தீங்கன்னா லாரி பாடி கட்டுற தொழில் இருந்து இன்னும் நிறைய தொழில்கள் செய்யுற ஊரு தான் நம்ம நாமக்கல் தான்.. அது மட்டும் இல்ல நாமக்கல் மாவட்டதோடு முட்டை உலகமும் கூட ரொம்ப பேமஸ் ..தமிழ்நாடு மக்களுக்கு சத்தான உணவாகிய முட்டை கொடுக்கிற ஊரு மட்டும் இல்ல தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்ச்சி ஊட்டுற மண்ணும் தான் இந்த நாமக்கல் மாவட்டம்…
தமிழன் என்று சொல்லுடா தலைநிமிர்ந்து சொல்லுடா இந்த வரிகளை எழுதினது யாரு தெரியுமா ? விஜயகாந்த் சொன்னாரு.. அண்ணன் கேப்டன் அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் சேர்த்து சொன்னவர் யார் தெரியுமா? நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை தான்.
ஓவ்வொரு ஒன்றியத்தில் தானியங்கு சேமிப்பு அமைக்கப்படும் என்று சொன்னீர்களே செய்தீர்களா..?
கோப்புறை தேங்காயை அரசே கொள்முதல் செய்யும் தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்து நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை என்று சொன்னீர்களே …
நியாய வேலை கடைகளில் நாட்டு சக்கரை விநியோகம்
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வுறுதி திட்டம் சொன்னேர்களே செஞ்சீங்களா..?
திமுக MLA க்கு சொந்தமான மருத்துவ கலோரியில் நடைபெற்ற கிட்னி திருட்டு.. இது தான் நாடறிந்த விஷயம் ஆச்சே… ஆனால் நம்ம நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதா சொல்றாங்க. குறிப்பாக விசை தறி யில் இருப்பவர்களை குறி வைத்து இது நடந்துள்ளது.
நம்ம ஆட்சி வந்தவுடன் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் .. கிட்னி திருட்டு ஆரம்பம் எங்க இருக்குனு பார்த்தீங்கன்னா கந்து வட்டு கொடுமையில் இருக்கு
இந்த ஏமாற்றும் திமுக அரசு கண்டுகொள்ளாததால் இந்த அவலத்திற்கு அவர்கள் தள்ள பட்டு இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை
விசைத்தறி தொழிலில் கந்து வட்டி அடியோடு ஒழிக்க வேண்டும்
திமுக மாதிரி பொய்யான வாக்குறுதிகளை எப்போதும் தமிழக வெற்றி கழகம் கொடுக்காது. இதைத் தவிர எதை புதிதாக சொல்வது என்று தெரியவில்லை. செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும். காற்றில் கல்வீடு கட்டப்படும். அமெரிக்காவிற்கு ஒத்தையடி பாதை போடப்படும். வீட்டுக்குள்ளே விமானம் ஓட்டப்படும் இதுபோன்று வாக்குறுதி சொல்லலாமா?
நம்ம சி. எம் அவர்கள் அடிச்சி விடுவார்களே அது போல அடிச்சு விடுவோமா..?