தவெக தலைவர் விஜய் இன்று நெல்லையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் ” 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழக்கமான தேர்தல் இல்லை.. இது ஒரு அதிசய தேர்தல்.. நம்ம தவெக ஆட்சி அமைந்தால் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் நல்லா இருப்போம்.. விவசாயிகள், மீனவர்கள் நல்லா இருப்போம்.. அதனால் தான் பார்த்து பார்த்து வாக்குறுதிகளை அறிவித்து வருகிறோம்..
உண்மையான காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் நிற்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். திமுகவின் தேர்தல் கணக்குகளை மக்கள் புதைத்துவிட்டதாக கூறிய விஜய், கரூர் விவகாரத்தின் போது என் மீது பழி போட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரம் இன்று முதல் தொடங்கி இருக்கிறது. முதற்கட்டமாக நெல்லையில் விஜய் தலைமையில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் நெல்லை தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது விஜய் பேசுகையில், திமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் வெளியே வேண்டுமானால் தனித்தனியாக இருக்கலாம். ஆனால் உள்ளுக்குள் இரண்டு பேரும் ஒன்றுதான். இரண்டு பேருக்கும் ஒரே நோக்கம் தான். மக்களுக்கு நல்லது செய்ய விஜய் வந்துவிடக் கூடாது என்பதே அவர்களின் நோக்கம். விஜய் வந்ததில் இருந்து அவர்களால் ஊழல் செய்ய முடியாமல் போய்விட்டது. அதனால் என் மீது செம கோபத்தில் உள்ளனர்.
திமுகவின் கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்து போய் இருக்கிறது. கூட்டணி கட்சிக்காரர்களே ஒருவருக்கு ஒருவர் வாக்கு போட மாட்டார்கள் போல.. இவர்கள் இப்படியென்றால்.. பாஜக தலைமையில் மற்றும் பலர்.. அவர்கள் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. திமுகவின் நேரடி கூட்டணிக்கும், மறைமுக கூட்டணிக்கும் நம் மீது காண்டு.
சில பல கோடிகளை கொடுத்து தமிழக காங்கிரஸ் கட்சியை ஸ்டாலின் பாக்கெட்டில் போட்டு கொண்டுள்ளார். ஆனால் உண்மையான காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் நிற்கிறது. சிறுபான்மை மக்களோட திமுகவின் சாயம் வெளுத்து போய்விட்டது. அதுவே திமுக, பாஜகவுக்கு என் மீது காண்டோ காண்டு. இது வெறும் தேர்தல் மட்டுமல்ல.. இதுவொரு எமோஷன்..
கரூர் விவகாரத்தில் என் மீது பழி போட்டார்கள்.. ஜனநாயகன் படத்தை முடக்கி பார்த்தார்கள்.. அதனை யார் முடக்கியது என்றே உங்களுக்கு தெரியும்.. ஆனால் திமுக, பாஜக மற்றும் பலராலும் என்னை மக்கள் கிட்ட இருந்து பிரிக்க முடியாது. 234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர்.. நமது வேட்பாளர்களில் யாரும் அம்பானி, அதானி கிடையாது.
இப்படியொரு தேர்தலை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே பார்த்திருக்கிறது. ஒருவொரு அதிசய தேர்தல்.. 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடக்கும்.. ஒரு எம்ஜிஆர், ஒரு காமராசர், ஒரு அண்ணா மாதிரி யாரும் வர மாட்டார்களா? என்று நீங்கள் ஏங்குவது எனக்கு தெரியும். அதற்காக தான் தவெக வந்துள்ளது. நிச்சயமாக தவெக ஆட்சி அமைக்கும். நிச்சயமாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.
செய்ய முடியாததை சொல்ல மாட்டோம்.. செய்வதை மட்டுமே சொல்வோம், சொல்லாததையும் செய்வோம்.. மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொட வேண்டிய அவசியம் இல்லை.. ஆனால் இப்போது ஆண்டு கொண்டிருப்பவர்கள் இதற்கு முன்பு ஆண்டவர்கள், மக்கள் காசில் இருந்து ஒரு பைசா கூட தொட மாட்டேன் என்று தில்லாக சொல்ல முடியுமா..? என்னை எதிர்ப்பவர்கள் தில்லாக, கெத்தாக கட்ஸாக இதை சொல்ல முடியுமா..?
நீங்கள் நன்றாக ஆட்சி நடத்தினால் பெண்களுக்கு ஏன் பாதுகாப்பு இல்லை..? சட்டம் ஒழுங்கு இவ்வளவு சீர் குலைந்துள்ளது.. இரண்டரை வயது குழந்தையை திமுக நிர்வாகி கொன்றானே அதற்கு பதில் என்ன? இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய சிறுமி உயிர் பறி போனது? இதற்கு பதில் என்ன ஸ்டாலின் சார்..? போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தாது ஏன்?
ஊழல், ஊழல் என்று ஊறி போய் கிடக்குது.. எந்த முகத்தை கொண்டு வந்து சார் ஓட்டு கேட்பீங்க.. இந்த தேர்தலில் உங்கள் பணத்தை ஒன்றும் செய்ய முடியாது.. இது மாற்றத்திற்கான தேர்தல்.. இது திமுகவால் அல்லது மற்றும் பலராலும் தடுக்க முடியாது.. எனவே மக்களே ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று விசில் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்.. இது விசில் புரட்சி தேர்தல்..
உங்களுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.. அனைத்து வலிகளையும் தாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன்.. ஒருநாளும் உங்களை ஏமாற்றமாட்டேன்.. 4 முனை போட்டி, 40 முனை போட்டி திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டியே.. இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். விசில் சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்க.. உங்க விஜய் நான் வரேன்.. விசில் அடிக்க ரெடியா..? நம்பிக்கையோடு இருங்க.. நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்..” என்று தெரிவித்தார்..








