இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 10ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு, சிபிஐ சம்மன் அனுப்பியது. ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் இருப்பதால் விஜய் விலக்கு கோரிய நிலையில், மீண்டும் ஆஜராக புதிய சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, 15ஆம் தேதி விஜய், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இதனைத் தொடர்ந்து இன்று விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக கரூர் பிரச்சாரத்திற்கு தாமதமாக வந்தது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வழங்கிய பதில்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்தது. எனவே அதனை மையப்படுத்தி இன்று விஜய்யிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. அவரிடம் விசாரணை நிறைவடைந்ததாகவும், அவர் சென்னை புறப்பட அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
விஜய்யிடம் 6 மணி நேர சிபிஐ விசாரணை

தவெக தலைவர் விஜய்யிடம் கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக டெல்லி சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.தவெக தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் மேற்கொண்ட பரப்புரை கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ஆம் தேதிகளில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜயிடம் விசாரணை நடந்தது.








