கோட்டைக்குள் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்

17-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று மே 11-ந் தேதி தொடங்குகிறது.இந்த கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர்.

தமிழக முதல்வராக ஜோசப் விஜய் நேற்று மே 10-ந் தேதி பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்வி அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இதனையடுத்து முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதலில் கையெழுத்திட்டார்.2 மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படைபோதைப் பொருள் குற்றங்களைத் தடுக்க 65 போதைப் பொருட்கள் தடுப்பு படை அமைத்தல் ஆகியவற்றுக்காக முதல்வர் விஜய் கையெழுத்திட்டார். இதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் தமது பணிகளை தொடங்கினார் முதல்வர் விஜய்.இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா எம்.எல்.ஏ.வுக்கு ஆளுநர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் 17-வது தமிழ்நாடு சட்டசபையின் முதல் கூட்டம் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர். அனைவருக்கும் தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.இதனையடுத்து நாளை மே 12-ந் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நடைபெறும்..