வரும் 5ம் தேதி கோவை வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணன்..!

கோவை :இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் வருகிற 5- ந் தேதி (ஞாயிறு) கோவை வருகிறார்.அவர் பேரூர் சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் நடக்கும் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார்.அவர் பேரூர் அடிகளார் மருத்துவமனையின் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் மேலும் பன் நோக்கு மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்தல், தொழில் முனைவோர்களுக்கு உபகரணங்கள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.இது தொடர்பாக பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.