மாணவர்களுக்கு செம குட் நியூஸ்… இனி பொதுத்தேர்வு கிடையாது..!!

ந்த் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் +1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, மாநில கல்விக் கொள்கை 2025யை செயல்படுத்தும் பகுதியாக 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் தீர்மானம் அறிவித்துள்ளது. இதன்படி நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறாது; அவர்களுக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும்.

பிளஸ்-1 வகுப்பில் கடந்த 8 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்பால் 8 லட்சம் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முந்தைய பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு, 2030ம் ஆண்டுவரை அரியர் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.

இதுவரை பிளஸ்-1 வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தப்பட்ட விதம், பிளஸ்-2 வகுப்பிற்கான பாடங்களை தனியார் பள்ளிகள் மட்டுமே நடத்துவதில் இருந்து மாணவர்களுக்கு சம வாய்ப்பு வழங்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புதிய கொள்கை, இருமொழிக் கல்விக்கான திட்டத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் உள்ளது. இது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.