கோவை சிவானந்தபுரம் எல்.ஜி.பி நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 46) அங்குள்ள திருவாசகர் வீதியில் ஆட்டோ மொபைல் கார் சர்வீஸ் மையம் நடத்தி வருகிறார். அங்கிருந்த எஞ்சின் ஸ்கேனர் எந்திரம் டூல்ஸ் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ2 லட்சம் இருக்கும் . இது குறித்து அதன் உரிமையாளர் அண்ணாமலை சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் . புகாரில் அந்த நிறுவனத்தில் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த ரோகன்கான் அவரது உறவினர் ஆகியோரை தேடி வருகிறார்கள்..
கோவை கார் சர்வீஸ் மையத்தில் துணிகர திருட்டு – 2 வடமாநில தொழிலாளருக்கு போலீஸ் வலைவீச்சு..!









