மாநில அளவிலான கால்பந்து போட்டி – கோப்பையை வென்ற வால்பாறை கல்லூரி மாணவர்களுக்கு குவியும் பாராட்டு.!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிணத்துக்கடவு ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டு வெகு சிறப்பாக விளையாடி முதல் பரிசு மற்றும் சுழல் கோப்பையை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். அம்மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரியின் முதல்வர் எம்.ஜோதிமணி அனைவரையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின்போது கல்லூரி பேராசிரியர்களும் மற்றும் மாணவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்..