பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு .!!

இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று டோக்கியோவில் நடைபெறும் குவாட் தலைவர்களின் இரண்டாவது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.மேலும்,குவாட் உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் ஆஸ்திரேலியாவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதனிடையே,அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்தியுள்ளார்.இந்த சந்திப்பின்போது,கொரோனா தொற்றை இந்தியா சிறப்பாக கையாண்டது என பிரதமர் மோடியை ஜோ பைடன் பாராட்டினார்.

மேலும்,”நமது நாடுகள் இணைந்து செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடியவை பல உள்ளன.அமெரிக்கா-இந்தியா இடையேயான கூட்டாண்மையை பூமியில் மிக நெருக்கமான ஒன்றாக மாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன்” என்று பிரதமர் மோடியுடனான சந்திப்பில் ஜோ பைடன் கூறினார்.

இதனையடுத்து,”அமெரிக்க முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தத்தின் முடிவில் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டில் உறுதியான முன்னேற்றத்தை காண்போம் என்று நான் நம்புகிறேன்”,என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,தற்போதுள்ள கொரோனா சூழல்,உக்ரைன் ரஷ்யா போர் ஆகியவை குறித்தும் இரு நாட்டும் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.மேலும்,இரு நாடுகளுக்கிடையேயான வணிகம்,பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.