ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல். டிரம்பிடம் பேசும் திட்டம் இல்லை

ரான் மீதான அமெரிக்க தாக்குதல் எதிரொலியாக, டிரம்பிடம் அது பற்றி பேசும் திட்டமே இல்லை என ரஷ்யா திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.இஸ்ரேல் – ஈரான் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா ஈரானின் 3 அணுசக்தி தளங்களை குண்டு வீசி தாக்கியது.இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதலையும், ஈரானின் அடுத்தக்கட்ட திட்டம் குறித்தும் மற்ற நாடுகளை விட ரஷ்யா, சீனாவின் பார்வை என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.இதனிடையே, இந்த பிரச்னை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பிடம், ரஷ்ய அதிபர் புடின் பேசும் திட்டம் இல்லை என்று க்ரெம்பிளின் மாளிகை அறிவித்து உள்ளது.