கோவை தனியார் மருத்துவமனை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்..!

கோவை சரவணம்பட்டி காந்திமா நகரில் உள்ள தனியார் மருத்துவமனை பின்புறம் நேற்று ஒரு அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 40 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை.இது குறித்துகணபதி கிழக்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரி பழனிச்சாமி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சப்- இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..