உதகை மலர் கண்காட்சி… 1.13 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்..!!

நீலகிரி: உதகை கண்காட்சியை 6 நாட்களில் 1.13 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை மலர் கண்காட்சியை காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி கோடை விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசின் தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சி ஆண்டு 127-வது மலர் கண்காட்சியை 15ம் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கண்காட்சியில், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 40 ஆயிரம் வண்ண மலர் மாடங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், மலர் கண்காட்சியில் பல்வேறு வகையிலான மலர்கள் இடம்பெற்றுள்ளன. இதை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர். இந்நிலையில், உதகை மலர் கண்காட்சியை கடந்த 6 நாட்களில் 1.13 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை மலர் கண்காட்சியை காண பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.