வால்பாறையில் அரசு பேருந்து மோதி இரு இளைஞர்கள் பரிதாப பலி..

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஷேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த டி.எண்.38. என்.3422 என்ற அரசு பேருந்து நேற்று மாலை சுமார் 6.15 மணியளவில் உருளிக்கல் அப்பர் டிவிசன் பகுதியில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டி.என்.55 பிக்யூ 8988 யமஹா என்ற இருசக்கர வாகனத்தில் வந்த உருளிக்கல் டாப்டிவிசன் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் அரவிந்த்சாமி வயது 25 மற்றும் சார்லஸ் என்பவரின் மகன் சந்தோஷ் வயது 20 ஆகிய இரு இளைஞர்களும் சம்பவப்பகுதியிலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து ஷேக்கல்முடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்தின் ஓட்டுனர் ஜெயக்கொடி வயது 57 அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..