சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பல்லாவரம் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் மக்கள் என ஏராளமானோர் இந்த ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலின் 6-வது பெட்டியில் புகை வந்ததால் பல்லாவரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மற்றொரு ரயில் சென்ற தண்டவாளத்தில், புகை பாதிப்பு ஏற்பட்ட ரயில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. 2 ரயில்களும் ஒரே தண்டவாளத்தில்
இருப்பதைக் கண்டு பயணிகள் பதற்றம் அடைந்தனர்..