ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு..!!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பை, உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி வாஷிங்​டனில் இன்று சந்​தித்​துப் பேசுகிறார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் நேற்று முன்​தினம் சந்​தித்​துப் பேசினர்.
அப்​போது ரஷ்​யா – உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வது தொடர்​பாக விரி​வாக ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்​கி, அதிபர் டொனால்டு ட்ரம்பை வாஷிங்​டனில் இன்று சந்​தித்​துப் பேசுகிறார். ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் தலை​வர் உர்​சுலா வோன் டெர் லியென், ஜெர்​மனி பிரதமர் பிரெட்​ரிக் மெர்​ஸ், பிரிட்​டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்​மர், இத்​தாலி பிரதமர் மெலோனி ஆகியோ​ரும் ஜெலன்​ஸ்​கியோடு இணைந்து அதிபர் ட்ரம்பை சந்​திப்​பார்​கள் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இதுகுறித்து உக்​ரைன் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: உக்​ரைனின் டோன்​ஸ்க் பகு​தி​யில் சுமார் 70 சதவீத நிலப்​பரப்பை ரஷ்யா கைப்​பற்றி உள்​ளது. அந்த பிராந்​தி​யம் முழு​வதை​யும் ரஷ்யா சொந்​தம் கொண்​டாடு​கிறது. போரை நிறுத்த டோன்​ஸ்க் பகு​தியை முழு​மை​யாக ரஷ்​யா​விடம் ஒப்​படைக்க வேண்​டும் என்று அந்த நாட்டு அதிபர் புதின் கூறி​யுள்​ளார். இதற்கு ஈடாக ரஷ்யா வசம் உள்ள மிகச் சிறிய பகு​தியை உக்​ரைனுக்கு வழங்க அவர் முன்​வந்​துள்​ளார்.

ராணுவ ரீ​தி​யாக டோன்​ஸ்க் பகுதி மிக​வும் முக்​கி​யத்​தும் வாய்ந்​தது. இந்த பகு​தி​யில் அரிய வகை தனிமங்​கள் உள்​ளிட்ட இயற்கை வளங்​கள் நிறைந்​துள்​ளன. எனவே டோன்​ஸ்க் பகு​தியை விட்​டுக் கொடுக்க முடி​யாது. உக்​ரைனுக்கு ஆதர​வாக ஐரோப்​பிய நாடு​கள் ஓரணி​யில் உள்​ளன. எனவே உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்​கியோடு இணைந்து ஐரோப்​பிய நாடு​களின் தலை​வர்​களும் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்​தித்​துப் பேச உள்​ளனர். நேட்டோ அமைப்​பில் உக்​ரைன் இணை​யக்​கூ​டாது என்று அதிபர் புதின் நிபந்​தனை விதித்​துள்​ளார். இது​வும் ஏற்​றுக் கொள்ள முடி​யாத நிபந்​தனை. இதுதொடர்​பாக அதிபர் ட்ரம்​புடன் விரி​வாக விவா​திக்​கப்​படும். இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.