ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் போர் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.எனவே இதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்காக 15 அம்ச திட்டத்தை அமெரிக்கா வகுத்தது. அதில், ஈரானுக்கு எதிரான பொருளாதார தடை நீக்கம், ஈரானின் அணுசக்தித் திட்டத்தை கைவிடு தல், ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறத்தல், ஆயுதக்குழுக்களுக்கு ஈரான் வழங்கி வரும் ஆதரவை நிறுத்துதல் போன்றவை முக்கியமாக இடம்பெற்று உள்ளன. ஆனால் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என நிராகரித்த ஈரான், அமெரிக்காவின் இந்த 15 அம்ச திட்டத்தையும் நிராகரித்தது.
இந்த நிலையில், ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் மீதான ராணுவத் தாக்குதல் மேலும் 10 நாள்களுக்கு நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஈரானிய அரசின் வேண்டுகோளை ஏற்று, எரிசக்தி நிலையங்கள் அழிப்பு நடவடிக்கைகளை ஏப். 6, 2026, வரை நான் நிறுத்திக்கொள்கிறேன்.





