பைக் மீது லாரி மோதி வாலிபர் பரிதாப பலி..

கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள குரல் குட்டையை சேர்ந்தவர் சாமிதுரை. இவரது மகன் சுரேஷ் (வயது 29)இவர் ஒத்தக்கால் மண்டபத்தில் தங்கியிருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் . நேற்று இவர் .ஏ.ஜி. புதூர் எல்.அன். டி பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவரது பைக் மீது மோதியது. இதில் சுரேஷ் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் .இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேல்முருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார் .இது தொடர்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த லாரி டிரைவர் வீரமணி ( வயது 52) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.