திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியர்களுக்கான பில்ட் நேஷன் அவார்டு விருது வழங்கும் மேலப்புதூரில் உள்ள ஜோசப் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் ரோட்டரி 3000 மாவட்ட ஆளுநர் ஆர்.ராஜா கோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.ஜமால் முகமது கல்லூரி முதல்வர் டி.ஐ ஜார்ஜ் அமலரத்தினம் மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எம்.பிரதீபா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.இவ்விழாவில் ரோட்டரி 3000 மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 25 ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க மாநில செயலாளர் மின்னல் சரவணன் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் ரோட்டரி கிளப் ஆஃப் போர்ட் ரோட்டரி கிளப் ஆஃப் டைமண்ட் சிட்டி ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி சிட்டி ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி ஹனீ பீஸ், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி ஐ டொனேஷன் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி தென்றல் உள்ளிட்ட ரோட்டரி கிளப்களின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஜமால் முகமது கல்லூரியின் தேசிய மாணவர்ப்படை மாணவர்கள் உள்ளிட் பலர் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரியும், ரோட்டரி சங்க நிர்வாகியுமான சுபா பிரபு நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தார்..
Leave a Reply