கோவை சரவணம்பட்டி, விநாயகபுரம் குமரன் வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து ( வயது 30) இவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தீபாவளி பண்டிகை விற்பனைக்காக அனுமதி பெறாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் நேற்று இரவு சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினார். அங்கு பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வியாபாரி மாரிமுத்து (வயது 30) கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது..
அனுமதி பெறாமல் பட்டாசு பதுக்கல் – வியாபாரி கைது..!








