கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே பத்திரப்பதிவு தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு ஒரு தொழிற்சங்கம் தொடர்பான பதிவுகளை பதிவு செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் அலுவலகத்தில் புகுந்து தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள்..
பத்திரபதிவு அலுவலகத்தில் தொழிற் சங்கத்தினர் திடீர் உள்ளிருப்பு போராட்டம்..!









