கோவை மே 20 கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கமுள்ள செங்குட்டை பாளையத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது .இங்கு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை தனிமைப்படுத்தி படிக்கட்டில் உட்கார வைத்து முழு ஆண்டு தேர்வு எழுத வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.அந்த மாணவி வயதுக்கு வந்ததால் தனியாக தேர்வு எழுத வைத்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து காவல்துறையும்,பள்ளி கல்வித்துறையும் விசாரணை நடத்தியது. இந்த சம்பவத்தில் பள்ளி முதல்வர் ஆனந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில்பள்ளி முதல்வர் ஆனந்தி,தாளாளர் தங்கபாண்டியன், உதவியாளர் சாந்தி ஆகியோர் இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களை கோவை நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெறுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை யடுத்து நேற்று பள்ளி முதல்வர், தாளாளர், உதவியளர் 3 பேரும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் கோவை எஸ்.சி .எஸ் .டி . நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதைத்தொடர்ந்து 3பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி விவேகானந்தன் உத்தரவிட்டார் .மேலும் இவர்களை தினமும் காலையில் நெகமம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுத வைத்த பள்ளி முதல்வர் உட்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்.
