வீடு புகுந்து ஆடு திருடிய 3 பேர் கைது.

கோவை மே 2 கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ள செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் குட்டியப்பன் (வயது 49) விவசாயி .இவரது வீட்டில் ஆடு வளர்த்துவருகிறார்.நேற்று வீட்டில் வளர்த்த ஒரு ஆட்டை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து சோமனூர் சேடபாளையம், குமரன் நகரை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற குரு பிரசாத் ( வயது 20 )கண்ணன் என்ற கவிதா என்ற உமையாள் ( வயது 27 ) திருப்பூர் மாவட்டம், பல்லடம் வடுகபாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ் ( வயது 18)ஆகியோரை கைது செய்தார்..