இலங்கையில் தமிழர்களை அழிக்க வந்தவர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்- சுப. வீரபாண்டியன் பேட்டி.!

கோவை சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசால் பாவேந்தர் பாரதி தாசன் விருது பெற்ற செந்தலை கவுதமனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் நடந்து கொண்டிருக்கின்ற உள்நாட்டு போராட்டத்தை பார்க்கும்போது தமிழர்களை அழிக்க வந்தவர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இதுபோன்ற அழிவு எந்த ஒரு நாட்டிற்கும் வரக்கூடாது.
பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே வீட்டிற்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. எந்த நாட்டிற்கு ஓடுவது என தெரியாமல் சொந்த நாட்டிற்குள்ளேயே பாதுகாப்பிற்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். கம்பராமாயணத்தில் அனுமான் இலங்கைக்கு தீவைத்தார் என்பது கதை.

ஆனால் இலங்கை யாழ்ப்பாண நூலகத்திற்கு தீ வைத்தவர்கள் தற்போது ஆளக்கூடியவர்கள் இன்னொரு இனத்தை அழிக்ககக்கூடாது என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக் காட்டு. இலங்கையில் நடப்பது இந்தியாவுக்கு உடனடியாக பொருந்தக்கூடிய நிகழ்வு.
இந்தியாவில் எல்லாவற்றையும் தனியாருக்கு விற்பனை செய்து வருகிறார்கள். அனைத்து துறைகளிலும் வரி விதிப்பை செய்து மக்களை இன்னும் இன்னலுக்கு ஆளாக்கி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.