இது தான் லாஸ்ட் வார்னிங்… ஓசி’யில் பயணித்தால் ‘சஸ்பெண்ட்’: போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை.!!

சென்னை: ‘ரயில்களில் டிக்கெட் இன்றி ஓசியில் பயணம் செய்யும் போலீசார், ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுவர்’ என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.விரைவு ரயில்களில் போலீசார் உரிய ஆவணங்கள் இன்றி, ‘டிக்கெட்’ எடுக்காமல் பயணிப்பது தொடர்கிறது.
சொந்த காரணங்களுக்காக செல்லும் போதும், டிக்கெட் எடுக்காமல், அடையாள அட்டையை மட்டும் காட்டுகின்றனர்.போலீசார் உரிய ஆவணங்களுடன், டிக்கெட் எடுத்து பயணம் செய்ய உத்தரவிடும்படி, ஏற்கனவே டி.ஜி.பி., சைலேந்திரபாபுவுக்கு, தெற்கு ரயில்வே கடிதம் எழுதி இருந்தது. எனவே, டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் கமிஷனர்களுக்கு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கை.ரயில்களில், போலீசார் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது பற்றி, தெற்கு ரயில்வே, நுண்ணறிவு மற்றும் உளவுப்பிரிவு போலீசார் வாயிலாக தெரிய வந்தால், விசாரித்து தலைமை அலுவலகத்திற்கு தகவல் தர வேண்டும். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட போலீசார், ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.