கோவை கவுண்டம்பாளையம் கந்தசாமி கவுண்டர் லே – அவுட்டை சேர்ந்தவர் சேகர் ( வயது 48 ) அங்கு பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று காலையில் வந்து பார்த்த போது கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த 88 ஆயிரத்து 679 ரூபாயை காணவில்லை. யாரோ பக்கவாட்டில் துளை போட்டு உள்ளே புகுந்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து சேகர் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் பிரவீன்வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்.
துளை போட்டு பழக்கடைக்குள் புகுந்து பணம் திருட்டு..!





