இருக்கிற பிரச்சனையில இவனுங்க வேற டிரம்ப்-பின் மைண்ட் வாய்ஸ்… ஐநாவில் தொட்டதெல்லாம் வேலை செய்யல..!!

வாஷிங்டன்: ஜெனிவாவில் நடந்த ஐநா கூட்டத்தில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பேச முயன்றபோது மைக் வேலை செய்யவில்லை.

மேடைக்கு செல்ல முயன்றபோது நகரும் படிக்கட்டுகள் வேலை செய்யவில்லை. அதேபோல டெலிபிராம்ப்டரும் வேலை செய்யவில்லை. இதையெல்லாம் தனக்கு எதிரான சதி டிரம்ப் விமர்சித்திருக்கிறார்.

டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் பிரதான மேடைக்குச் செல்லும் எஸ்கலேட்டரில் ஏறியபோது அது திடீரென நின்றதாக டிரம்ப் தெரிவித்தார். இருவரும் கைப்பிடிகளை பிடித்துக்கொண்டதால் எந்தவித காயமும் ஏற்படவில்லை. மேலும், தனது டெலிபிராம்ப்டர் சுமார் 15 நிமிடங்களுக்குச் செயல்படாததால், அதைப் பயன்படுத்தாமல் பேச வேண்டியதாயிற்று என்றும் அவர் கூறினார்.

கூட்டத்தில் ஒலி அமைப்பு சரியாக வேலை செய்யாததால், பலரால் தன்னுடைய பேச்சைக் கேட்க முடியவில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். இது அனைத்தும் அப்பட்டமான நாசவேலை என்று கூறிய டிரம்ப், தனது எதிராக சதி நடப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது குறித்த தனது சோஷியல் மீடியாவில், இந்த தொழில்நுட்ப சிக்கல்கள் வேண்டுமென்றே செய்யப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். பலரும் ஆம், இது நாசவேலை என்றும், சிலர் இல்லை, சாதாரணக் கோளாறுகள்தான் என்றும் பதிலளித்திருந்தனர்.

டிரம்ப் தனது பேச்சு முடிந்ததும், முன்னால் அமர்ந்திருந்த மெலனியா டிரம்ப், நீங்கள் பேசிய ஒரு வார்த்தையும் கேட்கவில்லை என்று தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார். எஸ்கலேட்டர் நிறுத்தம், டெலிபிராம்ப்டர் செயலிழப்பு, மைக் பிரச்சனை போன்ற தொடர்ச்சியான சிக்கல்களை முப்பெரும் நாசவேலை என்று வர்ணித்த டிரம்ப், இதற்குப் பொறுப்பானவர்கள் வெட்கப்பட வேண்டும் என்று கூறினார்.

இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த சம்பத்தில் சீக்ரெட் சர்வீஸ் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது அதிருப்தியை ஐ.நா. பொதுச்செயலாளருக்கு டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து ஐநா விடுத்துள்ள அறிக்கையில், “எஸ்கலேட்டரில் பாதுகாப்பு அம்சம் இருக்கிறது. படிக்கட்டுகள் நகரும்போது மக்கள் அல்லது பொருட்கள் தற்செயலாக கியரில் சிக்காமல் அல்லது உள்ளே இழுக்கப்படாமல் தடுக்க தானாக நின்றுவிடும்படி டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. எனவே தற்செயலாக நின்றிருக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.