விநாயகர் கோவிலில் திருட்டு..!

கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள ஜீவா நகரில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் யாரோ கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த கோலப்பொடி பெட்டி, உண்டியல் பணம் ரூ 16, ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இது குறித்து கோவில் பூசாரி வரதராஜன் (வயது 69) பீளமேடு போலீசில் புகார் செய்தார் . சப் இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..