கோவை ரத்தினபுரி சங்கனூர் ,புது தோட்டம், 3 -வது வீதியை சேர்ந்தவர் சரவணகுமார் .இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 39 ) இவர் கடந்த 20 -ஆம் தேதி கணவரிடம் திருத்தணி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் “ஸ்விட்ச் ஆப் ” செய்யப்பட்டுள்ளது. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து கணவர் சரவணகுமார் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.
திருத்தணி கோவிலுக்கு சென்ற பெண் எங்கோ மாயம்..!
