கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம், ஸ்ரீராம் காலனியை சேர்ந்தவர் ஜனகலிங்கம். இவரது மனைவி சுயம்பு கனி ( வயது 50) இவரது கடையில் நேற்று குனியமுத்தூர் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ( குட்கா ) வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன..இது தொடர்பாக சுயம்பு கனி கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
கடையில் குட்கா விற்ற பெண் கைது..!
