லண்டனைச் சேர்ந்த ‘ ஹென்லி அண்டு பார்ட்னர்ஸ்’ என்ற நிறுவனம் , சர்வதேச பயணம் தொடர்பான ஆய்வுகளை செய்து வருகிறது .
விமான நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து , விசா இல்லாமல் அதிக நாடுகளுக்கு செல்ல எந்த பாஸ்போர்ட் உதவும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகில் 227 நாடுகளின் அனுமதியைக் கணக்கிட்டு, 2026ம் ஆண்டுக்கான பட்டியலை அந்நிறுவனம் தரவரிசைப் பட்டியலை தயாரித்து உள்ளது.
சிங்கப்பூர் முதலிடத்தை தக்க வைத்து கொண்டது. 85வது இடத்தில் இருந்த இந்தியா 75வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இப்போது விசா இல்லாமல் 56 நாடுகளுக்கு பயணிக்க முடியும். விசா இல்லாமல் பயணியக்கூடிய நாடுகளில் இந்தோனேசியா, பூடான், மாலத்தீவு, கென்யா, உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.
உலகின் மிகவும் சகத்திவாய்ந்த பாஸ்போர்ட் நாடுகள் வரிசையில் முதலிடத்தை சிங்கப்பூர் தக்க வைத்து கொண்டுள்ளது. 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். 2வது இடத்தில் உள்ள ஜப்பான், தென் கொரியா பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். 3வது இடத்தில் உள்ள ஸ்வீடன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாஸ்போர்ட் வைத்திருப்போர் 186 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, நார்வே (4வது இடம்)- 185 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.ஆஸ்திரியா, கிரீஸ், மால்டா, போர்ச்சுகல் (5வது இடம்)- 184 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். நியூசிலாந்து (6வது இடம்) ,ஆஸ்திரேலியா (7வது இடம்), கனடா- (8வது இடம்)மலேசியா- (9வது இடம்), அமெரிக்கா (10வது இடம்) – அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 179 நாடுகளுக்கு செல்ல முடியும்..








