அதிமுகவினரிடம் வாக்குவாதம் செய்த தவெகவினர்!

தமிழக வெற்றி கழக ஒருங்கிணைப்பாளர் குறித்து அவதூறாகப் பேசிய அதிமுக தலைமைக்கழகப் பேச்சாளரை, த.வெ.க தொண்டர்கள் வழிமறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.காவல்துறை முன்னிலையில்,அ.தி.மு.க.வினர் மன்னிப்பு கேட்ட பின் தான் விடுவிக்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு ஒன்றியப் பகுதிகளில், அதிமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன. தமிழக வெற்றிக்கழக ஒருங்கிணைப்பாளரின் சொந்த ஊரான குள்ளம்பாளையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில், அ.தி.மு.க.பேச்சாளர்முத்து மணிவேல் பேசும்போது, தமிழக வெற்றி கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது. கோபமடைந்த தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அதிமுகவினரை வழிமறித்தனர். இரு கட்சி தொண்டர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்ப்பட்டதால் பதட்டம் நிலவியது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இரு தரப்பினரையும் அழைத்து ஒரு வீட்டில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முடிவில் வெளியே வந்த தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், செங்கோட்டையனை தரக் குறைவாக பேசியவர், தன்னிடம் மன்னிப்பு கேட்டதால் இந்த பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்கிறோம் என்று கூறி, அங்கிருந்து கலைந்து சென்றனர்.