கள்ளகாதலனின் மனைவி,மகள் குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்து… அழகு கலை பெண் நிபுணர் போக்ஸோவில் சிறையில் அடைப்பு.!!

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் உமா ரஞ்சனி (வயது 28). அழகு கலை நிபுணர். இவருக்கும் கோவையை சேர்ந்த 40 வயது தனியார் நிறுவன ஊழியருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

கள்ளக்காதலர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உற்சாகமாக வலம் வந்தனர். இந்த தகவல் தனியார் நிறுவன ஊழியரின் மனைவிக்கு தெரியவந்தது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. பின்னர் இதுகுறித்து அவரது மனைவி குடும்பத்தினரிடம் கூறினார்.இதனால் அதிர்ச்சி அடைந்த இருதரப்பு குடும்பத்தினரும் கள்ளக்காதலில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியரை அழைத்து கண்டித்து அறிவுரை கூறினர்.

இதனால் தனியார் நிறுவன ஊழியர் கள்ளக்காதலை கைவிட்டார். இதையடுத்து அவர் கள்ளக்காதலியான உமாரஞ்சினியை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார்.
ஆனால் உமா ரஞ்சனி கள்ளக்காதலை கைவிட மறுத்து தொடர்ந்து அவரிடம் பேச முயறசி செய்து வந்ததாக தெரிகிறது. அப்போது தனியார் நிறுவன ஊழியர் அவரை கண்டு கொள்ளவில்லை. இதை பொறுத்துக்கொள்ள முடியாத உமாரஞ்சனி, கள்ளகாதலனை பழி வாங்குவதற்காக அவரது மனைவி, 15 வயது மகளின் புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் ஆபாச வார்த்தைகளால் குறிப்பிட்டு பதிவிட்டார்.

இதனை கண்டு தனியார் நிறுவன ஊழியரின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உமா ரஞ்சனியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.