தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வின் முடிவுகள் மே 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதைவிட ஒரு நாள் முன்னதாகவே மே 8-ம் தேதி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வுத் முடிவும் அசையா அட்டவணையைவிட முன்னதாக வெளிவரும் என கல்வித்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகிய நிலையில், தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, நாளை மறுநாள் அதாவது 16 ஆம் தேதி காலை 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, சுமார் 8.75 லட்சம் மாணவ-மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு அட்டவணை வெளியானபோது, முடிவுகள் மே 19-ம் தேதி (திங்கள் கிழமை) வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில், நாளை மறுநாள் 16 ஆம் தேதி காலை வெளியாக உள்ளது.
இதேபோல் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் 16 ஆம் தேதி பிற்பகல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.